தமிழகத்தில் ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற இடங்களில் பிப்ரவரியில் நடைபெறுகிறது
Jan 24, 2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வருடாவருடம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற தடைக்குப் பின் மூன்று வருடங்கள் நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, தமிழக சட்டசபையில் சட்டமாக நிறைவேற்றப்பட்டதால் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
இதையடுத்து பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூரிலும், பிப்ரவரி 2ம் தேதி பாலமேட்டிலும் பிப்ரவரி 5ம் தேதி மதுரை அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5ம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறஉள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 300 வீரர்கள், 500 காளைகள் பங்கேற்கின்றனர். இப்போட்டி காலை 8மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற இடங்களில் பிப்ரவரியில் நடைபெறுகிறது”