தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டா அமைப்பு டெல்லியில் ஆர்ப்பாட்டம்
May 24, 2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதால் பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தது.
அப்போது தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். பின் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தையும் பிறப்பித்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைப்பதற்காக பிரதமரை இன்று(24.05.17) சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கையை அளித்து அங்குள்ள தமிழ்நாடு இல்லத்திற்குத் திரும்பினார்.
அப்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டா அமைப்பு தமிழ்நாடு இல்லத்தின் முன்பாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக முதல்வரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. எனவே அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டா அமைப்பு டெல்லியில் ஆர்ப்பாட்டம்”