மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக அரசு ஊழியர்கள், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு நாள் சம்பளம் தர முடிவுJan 11, 2017

பருவமழை பொய்த்துப்போனதாலும், காவிரி நதிநீர் இல்லாததாலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் கருகியதால் சில விவசாயிகள் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளனர்.

siragu-karnataka-farmer

விவசாயிகளின் நிலையை அறிந்து அவர்களது துக்கத்தில் பங்கேற்கும் விதமாக, அரசு அலுவலக உதவியாளர்கள், ஊராட்சி – நகராட்சி, அனைத்து பல்கலைக் கழகங்களின் பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் என்று அனைவரும் தமது இந்த மாத ஊதியத்தில் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம் என தமிழக அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் கே.கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வணிக வரித்துறை அலுவலக உதவியாளர் சங்கம், மாநகராட்சி – நகராட்சி அலுவலக உதவியாளர்கள் சங்கம், ஊராட்சி குடிநீர் மேல் நிலைய நீர் தேக்க தொட்டி, கை பாம்பு மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று கே.கணேசன் கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக அரசு ஊழியர்கள், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு நாள் சம்பளம் தர முடிவு”

அதிகம் படித்தது