மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக அரசு: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்Jan 11, 2017

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனசை அறிவித்துள்ளது தமிழக அரசு. 2015-16ம் ஆண்டிற்கான சி மற்றும் டி தொகுதி சார்ந்த அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும்.

siragu-tamilnadu

ஏ மற்றும் பி தொகுதியைச் சார்ந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தொகுப்பூதியம் பெரும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.1000சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். மேலும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் அரசுக்கு ரூ.325 கோடி செலவாகும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக அரசு: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்”

அதிகம் படித்தது