தமிழக பட்ஜெட்: நாட்டு மாடு இனங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு
Mar 16, 2017
தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று(16.03.17) சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஜெயக்குமார். சசிகலா, தினகரன் பெயர்களை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சட்டசபையில் திமுக-வினர் அமளியில் ஈடுபட்டனர்.
கடும் அமளிக்கு இடையில் 2017-18ம் ஆண்டு பட்ஜெட்டை தொடர்ந்து தாக்கல் செய்தார் ஜெயக்குமார். தமிழகத்தில் உள்ள நாட்டு மாடு இனங்களான காங்கேயம், உப்பளஞ்சேரி, பர்கூர் போன்றவற்றை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
25 புதிய கால்நடை கிளை மையங்கள் அமைக்கப்படும், 2017-18ம் நிதி ஆண்டில் ஏழை பெண்களுக்கு 12,000பசுக்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1,50, 000ஏழை குடும்பங்களுக்கு ஆறு லட்சம் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கப்படுகிறது.
இலவசமாக ஆடு, மாடு வழங்கப்படும் திட்டத்திற்கு 182 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டு மாடு இனப்பெருக்கத்திற்கு புதிய திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. மேலும் கோழி வளர்ச்சி திட்டத்துக்கு 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக பட்ஜெட்: நாட்டு மாடு இனங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு”