தமிழக பொறுப்பு ஆளுநர் அதிகாரிகளுடன் ஆலோசனை
Feb 10, 2017
தமிழகத்தில் தற்போது அசாதரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா-வால் அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
நேற்று சென்னை வந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா சந்தித்தனர். இவர்களின் சந்திப்பிற்குப் பின் இன்று தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் தமிழக ஆளுநர்.
அதன்படி தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுப் பிரிவு கூடுதல் தலைவர் தாமரைக் கண்ணன் மற்றும் போலிஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோரை அழைத்து தமிழக நிலை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதன் பிறகு தமிழகத்தின் நிலை குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்ப உள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக பொறுப்பு ஆளுநர் அதிகாரிகளுடன் ஆலோசனை”