மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக முதல்வர்: ஜல்லிக்கட்டு நிச்சயம் நடத்தப்படும்Jan 11, 2017

பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

siragu-panneerselvam2

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதுவரை மத்திய அரசிடமிருந்து பதில் வராத நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு பின்வாங்காது என்றும், ஜல்லிக்கட்டு உறுதியாக நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐந்து பக்க அறிக்கையை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதில் ஜல்லிக்கட்டுக்கு ஏன் தடை வந்தது முதலான காரணங்கள் அடங்கியுள்ளது. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் நிச்சயம் காக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக முதல்வர்: ஜல்லிக்கட்டு நிச்சயம் நடத்தப்படும்”

அதிகம் படித்தது