மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக முதல்வர்: மரணமடைந்த முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதி உதவிMar 14, 2017

டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆய்வு படிப்பு படித்து வந்தார் முத்துக்கிருஷ்ணன். இவர் சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்தத்தின் மகன்.

Siragu Muthu-Krishnan

முப்பது வயதான இவர் டெல்லி முனிர்கா என்ற இடத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு ஹோலி கொண்டாட்டத்திற்குச் சென்றுள்ளார். அங்கு உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்திருந்தார்.

முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் மர்மம் உள்ளது என அவரது பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்க உத்தரவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக முதல்வர்: மரணமடைந்த முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதி உதவி”

அதிகம் படித்தது