மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தலைவலியைப் போக்க வழிமுறைகள்

சிறகு நிருபர்

May 7, 2016

headache

 1. துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.
 2. ஐந்தாறு துளசி இலைகளும், ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
 3. நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
 4. இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்றுபோட தலைபாரம் குணமாகும்.
 5. வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.
 6. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப்போட தலைவலி குறையும்.
 7. கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
 8. பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அரை தேக்கரண்டி விக்ஸ்அல்லது அமிர்தாஞ்சன் சேர்த்து, போர்வையால் மூடி ஆவி பிடித்தால் தலைவலி பறந்து விடும்.
 9. அரை டம்ளர் வெந்நீரில், அரை எலுமிச்சம்பழம் பிழிந்து 2 கல் உப்புபோட்டு குடித்தால் தலைவலி குணமாகும்.
 10. மருந்துக் கடைகளில் கிடைக்கும் நீர்க்கோர்வை மாத்திரையை வெந்நீரில் இழைத்து நெற்றியில், பிடரியில் பற்றுப்போட ஒற்றைத் தலைவலி தீரும்.
 11. முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.
 12. குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலைவலியைப் போக்க வழிமுறைகள்”

அதிகம் படித்தது