மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேர்தல் ஆணையம்: அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமனம் தொடர்பான வழக்கு 20ம் தேதிக்குள் முடிவுMar 15, 2017

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா அதிமுக-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதன் பிறகு பல்வேறு மாற்றங்கள் தமிழக அரசியலில் ஏற்பட்டதையடுத்து அதிமுக இரண்டாக பிளவுபட்டது.

Siragu o.p.s2

அதிமுக சட்டவிதிகளின்படி சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று ஓ.பி.எஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். தொடர்ந்து சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸ்-க்கு சசிகலா தற்போது பதில் அளித்துள்ளார். இதற்கு பதில் மனுவை ஓ.பி.எஸ் அணியினர் அளித்துள்ளனர். இதையடுத்து இன்று ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி-யை சந்தித்து சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்றும், உண்மையான அதிமுக தாங்கள் என்பதால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் வலியுத்தினார்.

இரண்டு தரப்பு மனுவையும் ஆலோசித்து வரும் 20ம் தேதிக்கும் முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேர்தல் ஆணையம்: அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமனம் தொடர்பான வழக்கு 20ம் தேதிக்குள் முடிவு”

அதிகம் படித்தது