மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொடர்ந்து கூட்டணியில் இணைய த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் முயற்சிOct 24, 2016

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், தான் ராஜ்யசபா எம்.பி-யாகி பா.ஜ.க அமைச்சரவையில் இணைந்து மத்திய அமைச்சராகிவிட வேண்டும் என்ற எண்ணத்தை அறிந்த அதிமுக மற்றும் திமுக போன்ற இரு கட்சிகளும் ஜி.கே.வாசனை கூட்டணியில் சேர்க்க மறுத்து வருகின்றனர்.

siragu-vasan

சென்ற தமிழக சட்டசபை தேர்தலின்போது அதிமுக-வுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தையில் அதிமுக கொடுக்கப்பட்ட 5 தொகுதிகளுடன் தனக்கு ராஜ்யசபா சீட் ஒன்றையும் தரவேண்டும் என்று சசிகலா மற்றும் ஜெயலலிதாவிடம் கேட்டிருந்தார். அதனால் அவர்கள் மறுத்ததால் மக்கள் நல கூட்டணியில் இணைந்தார்.

அதேபோல் திமுகவிடமும் ராஜ்யசபா சீட் தேவை என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு கனிமொழி மறுத்ததால் அக்கூட்டணி கைவிடப்பட்டது.

மீண்டும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் விடாது திமுகவுடன் கூட்டணியில் இணைய முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொடர்ந்து கூட்டணியில் இணைய த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் முயற்சி”

அதிகம் படித்தது