மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நவம்பர் 19ந்தேதி தேர்தல்: தமிழகத்தில் உள்ள 3 தொகுதிகளுக்குOct 17, 2016

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில் வரும் நவம்பர் மாதம் 19ந்தேதி தேர்தல் நடக்கவுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

siragu-election

கடந்த மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்ததின் பெயரில் அத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சீனிவேல் உடல்நலக்குறைவால் காலமானார்.

எனவே இந்த மூன்று தொகுதிகளிலும் வரும் நவம்பர் மாதம் 19ந்தேதி தேர்தல் நடக்கவுள்ளதாக தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 26ல் துவங்குள்ளதாகவும், நவம்பர் 5 ந்தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

நவம்பர் 19ந்தேதி இம்மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று நவம்பர் 22ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த ஜான்குமார் ராஜினாமா செய்ததையடுத்து, இத்தொகுதிக்கும் நவம்பர் 19ந்தேதியே தேர்தல் நடக்கவுள்ளது. இதில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நவம்பர் 19ந்தேதி தேர்தல்: தமிழகத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு”

அதிகம் படித்தது