மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நீட் தேர்வு தொடர்பாக பிரதமரை பிப்., 27ல் சந்திக்கிறார் முதல்வர்Feb 24, 2017

ஈஷா யோகா நிறுவனம் அமைத்துள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று கோவை வரவுள்ளார். அவரை வரவேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை சென்றுள்ளார்.

Siragu edappadi-palanisamy2

அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், வரும் 27ம் தேதி நீட் தேர்வு தொடர்பாக பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஹிட்ரோ கார்பன் திட்டம் விவகாரத்தில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோயம்புத்தூரில் மோனோ ரயில் திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீட் தேர்வு தொடர்பாக பிரதமரை பிப்., 27ல் சந்திக்கிறார் முதல்வர்”

அதிகம் படித்தது