மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல்: ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்Mar 6, 2017

புதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இத்திட்டத்தினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், விவசாயம் பாதிக்கப்படும் போன்ற காரணங்களால் 19- வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

Siragu-neduvasal2

இப்போராட்டத்தில் மாணவர்கள், பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் என பலரும் கலந்து போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் புதுக்கோட்டையின் வடக்கு மாவட்ட நெடுவாசல் பாசன விவசாயிகள் நல சங்க தலைவரும், மதிமுக ஒன்றிய செயலாளருமான செல்வராஜ் என்பவர் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தும் பொழுது போதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், இவ்விதிமுறைகளை நெடுவாசலில் பின்பற்றவில்லை. நெடுவாசல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் போன்றவை செல்வராஜ் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல்: ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்”

அதிகம் படித்தது