மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பற்களை ஆரோக்கியமாக வைக்க சில குறிப்புகள்

சிறகு சிறப்பு நிருபர்

Jun 6, 2015

parkalin paadhukaappu

  • புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து, இதில் கால்பங்கு உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் வலி தீரும்.
  • வேப்பங்குச்சியினால் பல் துலக்கி வந்தால் பற்கள் நல்ல ஆரோக்கியமாகஇருக்கும்.
  • கிராம்பு, ஓமம், கற்பூரம்ஆகியவற்றைஎடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ளபல் ஈறுகளில் வைத்து சிறிது நேரத்திற்குப்பின் வாய் கொப்பளிக்க பல் ஈறுவீக்கம்தீரும்.
  • கொய்யா இலையை நன்றாக மென்று வெந்நீரில் வாய்கொப்பளிக்க பல் கூச்சம் விலகிவிடும்.
  • வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பும் வாயைநன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல்தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவவேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.
  • அடிக்கடி முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள்நன்கு உறுதியாக இருக்கும்.
  • பச்சை வெங்காயத்தை தினமும் நன்றாக மென்று சாப்பிட்டுவர பல் சம்பந்தமானநோய்கள் நம்மை அணுகாது.
  • நெல்லிக்கனியை நன்றாக மென்று சாப்பிட்டுவர பற்களும்ஈறுகளும் உறுதியாகும்.
  • நீரில் துத்தி இலையை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அந்த நீரில் வாயை கொப்பளித்து வந்தால் பல்ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.
  • வெந்நீரில் வெங்காயச் சாற்றைக் கலந்து அந்நீரில் வாய் கொப்பளித்து, பின்வெறும் வெங்காயச் சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலிகுறையும்.
  • கிராம்பை பொடி செய்து வைத்துக்கொண்டு, இதனை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய்நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். மற்றும் கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்டஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
  • எலுமிச்சை சாற்றில் சிறிது உப்புத் தூள் கலந்து, பற்களைநன்றாக தேய்க்க வேண்டும். ஈறுகளையும் விரலால் நன்றாக தேய்த்து வந்தால் ஈறுகள்பலம் பெறும்.
  • கடுக்காய் தூள் 100 கிராம், காவிக்கல் பொடி 50 கிராம், கிராம்புத்தூள் 10 கிராம், பொறித்த படிகாரத்தூள் 10 கிராம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதைக் கொண்டு காலை-இரவு இரு வேளையும்துலக்கிவரபல் வலி, பல்கூச்சம், ஈறு நோய்கள் தீரும்.


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பற்களை ஆரோக்கியமாக வைக்க சில குறிப்புகள்”

அதிகம் படித்தது