மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு இன்றே(24.11.2016) கடைசி நாள்Nov 24, 2016

நவம்பர் 8ம் தேதியன்று பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்நோட்டுக்களை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றும், இந்நோட்டுக்களை மாற்றுவதற்கு நவம்பர் 24ம் தேதியே கடைசி நாள் என்று என்றும் அறிவித்திருந்தது.

A man deposits his money in a bank in Amritsar

ரூபாய் நோட்டு மாற்றம் முதலில் ஒருவருக்கு 4000 ரூபாய் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது, பின் 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. ஆனால் ஒருவரே மீண்டும் மீண்டும் மாற்றுவதைக் தடுக்க 2000 ரூபாயாக மாற்றலாம் எனவும் அவ்வாறு மாற்றப்படும் நபரின் விரலில் மை வைக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

செல்லாத 500, 1000 ரூபாய் மாற்றுவதற்கு இன்றே(24.11.2016) கடைசி நாள். ஆனால் வங்கியில் செல்லாத நோட்டுக்களை டிசம்பர் 30 வரை டெபாசிட் செய்யலாம். வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் வங்கியில் புதியதாக கணக்கு துவங்கி வங்கியில் டெபாசிட் செய்யலாம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு இன்றே(24.11.2016) கடைசி நாள்”

அதிகம் படித்தது