மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா பதிலடிNov 23, 2016

சமீப காலமாக ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. குப்வாரா எல்லைப் பகுதியில் நேற்று இந்திய வீரர்கள் கண்காணிப்பில் இருந்தபொழுது பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதில் மூன்று வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் பதற்றம் நிலவி வருகிறது.

siragu-pakistan2

அதில் ஒரு வீரரின் தலையை துண்டித்து போட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் பாகிஸ்தான் இத்தாக்குதலை பொய் எனவும், இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளது.

பாக்., ராணுவத்தின் இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் பாக்., நிலைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. மீண்டும் பாக்., ராணுவம் காஷ்மீர் மாநிலத்தின் கிருஷ்ணா காட், பூஞ்ச் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி”

அதிகம் படித்தது