பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல்
May 23, 2017
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் இந்திய ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது.
இந்நிலையில் நவ்காம் பகுதியில் தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அதில் இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்திய ராணுவம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பதுங்கு குழிகள் மீது குண்டு மழை பொழிந்து வருகிறார்கள். தற்போது காஷ்மீரின் நவ்ஷேரா மற்றும் ரஜோரி பகுதிகளில் இந்திய ராணுவம் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல்”