பாராட்டும் கலை
காசி விசுவநாதன்Dec 1, 2011
எந்த ஒரு நபரையோ, அல்லது செயலையோ, உதவியையோ பாராட்டுவது என்பது மேற்கு நாடுகளில் நன்கு அறியப்பட்டு கடைப்பிடிக்கபடுகிறது. கிழக்கு நாடுகளில் குறிப்பாக அதுவும் துணைக்கண்டத்தில் இது மிக அருகி, அரிதாகவே உணரப்படுகிறது. பண்பாட்டளவில் அது மக்கிப்போனதாகவே தெரிகிறது. ஐரோப்பியர்கள் ” The Art of appreciation “ என்று ஒரு தலைப்பிட்டு அதனை மக்கள் வாழ்வியல் கூறாக, தங்கள் குழந்தைகளுக்கு தன்னியல்பாகவே வழக்கிலும் வழக்கத்திலும் கொண்டு வருகின்றனர். நாம் ஏன் பாராட்ட வேண்டும் ? எதற்கு பாராட்டவேண்டும் ? யாரைப்பாராட்ட வேண்டும் ? என்றெல்லாம் கேள்விகள் வந்து விடுகின்றன. மேற்படி கேள்விகள் தவிர்க்கமுடியாத, ஆனால் கட்டாயம் தவிர்க்கவேண்டிய ஒன்று.
நான் பல ஐரோப்பியர்களிடம் பழகும் போது உடனடியாக தெரிந்து கொண்ட வேறுபாடு : அவர்கள் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இயல்பான தகவல்கள், உதவிகள் ஆகியவற்றிற்கு தன் சகாக்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரிடமும் ” உங்கள் மேலான உதவிக்கு நன்றி” உங்கல் செயல் ” மிகவும் போற்றுதலுக்குரியது ” என்பது போன்றவை பாராட்டுக்கள், வெறும் சடங்கு சார்ந்த நன்றி அல்ல. அதற்கும் மேலாக, தனது சகாக்களை உற்சாகப்படுத்தும், பாராட்டும் – “வித்தை” தான். இது நம் துணைக்கண்டத்தில் காணமுடியாத ஒன்று. நம்மவர்கள் மனிதர்கள் என்ற நிலையில் இருந்து மாறுபட்டு, வயது,நிறம், மொழி, பதவி என்ற அளவுகோள் இட்டு ஒருவரிடம் தொடர்பு கொள்ளும் போது, ( பாராட்டும் ) கலை இழந்த நிலையில் தான் இருக்கிறோம்.
ஒருவர் நல்ல உடையணிந்தால், அதனை பாராட்டும் போது, கேட்பவருக்கும் சொல்பவருக்கும் ஒரு நல்ல அதிர்வலைகள் ஏற்படும், மேலும் ஒருவர் செய்யும் முயற்சிகளை சிறிய பலன் ஆனாலும், “மிக்க நன்று, உங்களால் மேலும் செய்ய முடியும், உங்கள் முயற்சி எதிர் கால பயன் பெறும் வாய்ப்பு உள்ளது “, என்றால், அது அந்த நபருக்கு மிகப்பெரிய உந்து சக்தியாகவே அமையும். இதனை நாம் ஒவ்வொரு செயலுக்கும் விழிப்பாக இருந்து ” பாராட்டும்கலையை ” வளர்த்தெடுக்க வேண்டும். இதனை முயற்சித்தால் அந்த சமூகம் ஒரு மாறுதலைப்பெறும் என்பதில் ஐயம் இல்லை. ஆகவே பாராட்டும் கலையை நம் வாழ்வில் எல்லா நிலைகளிலும் வளர்த்தெடுப்போம். சமூக மாற்றம் காண்போம். நன்றி.
காசி விசுவநாதன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
அருமை.
இங்கு நம் பாராட்டுக்கல் எல்லாம் பாசதலைவனுக்கு நடக்கும் பாராட்டு போல தான். பாராட்டு பலருக்கு ஒரு போதை போல் ஆகிவிடுகிரது.
அருமையான பதிவு. வரவேற்கின்றேன்.