மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பார்ப்பி பொம்மையும் வழக்குகளும் !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jun 19, 2021

siragu barbie doll

பார்ப்பி பொம்மையைப் பற்றி நாம் நிறையத் தகவல்கள் அறிந்திருப்போம். பார்ப்பி நீதிமன்றத்திற்குச் சென்ற செய்திகளை அறிந்திருக்கின்றோமா? சில வியக்கத்தக்க வழக்குகளைப் பற்றியும் அதில் பார்ப்பி பொம்மையின் பங்கினையும் பார்க்கலாம்.

ஒரு ஒளிப்படக் கலைஞர் பார்ப்பி பொம்மையைப் பயன்படுத்தி Food Chain Barbie என்ற தலைப்பில், பாலின சமத்துவத்தைப் பறைசாற்ற நினைத்தார். சமையல் பாத்திரங்களுடன் நிர்வாண பார்ப்பி பொம்மை படும் அவதிகளை அவர் படமெடுத்தார். Malted Barbie என்ற தலைப்பில் பார்ப்பி மில்க் ஷேக் இயந்திரத்துடன் இருப்பதுபோன்றும், Barbie Enchiladas என்ற தலைப்பில் பார்ப்பி tortillas -இல் சுற்றப்பட்டு ஒரு oven-இல் இருப்பது போன்றும் படங்கள் இருந்தன. பார்ப்பியை உருவாக்கிய Mattel நிறுவனம் அந்த ஒளிப்படக் கலைஞர் அனுமதியின்றி பார்பியியை பயன்படுத்தினர் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் நீதிமன்றம் இது காப்புரிமை மீறலில் வராது என்று கூறி Mattel நிறுவனம் தான் ஒளிப்படக் கலைஞருக்கு வழக்கறிஞர் கட்டணம் தரவேண்டும் என்று உத்தரவிட்டது.

Radio City Music Hall என்று பொழுதுபோக்கு நிறுவனம் Rockettes 2000 doll என்ற பொம்மை வடிவமைப்பை புத்தாயிரத்தில் வடிவமைத்தார்கள், Radio City Music Hall Rockettes அந்த பொம்மைகள் குறிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது, ஆனால் Mattel நிறுவனம் அந்த பொம்மைகள் பார்ப்பி பொம்மைகளை உருவத்தில் ஒத்திருக்கிறது என்று வழக்கு தொடர்ந்தனர். மாவட்ட நீதிமன்றம் Radio City க்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது ஆனால் மேல்முறையீட்டில் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராகவும், Radio city hall பொம்மை வடிவமைப்பு பார்ப்பி பொம்மையை ஒத்திருப்பதாகவும் எனவே இது காப்புரிமை மீறல் என்றும் தீர்ப்பளித்தது.

டேனிஷ் பாப் குழுவினர் பார்ப்பி கேர்ள் என்ற பாடலை எழுதி இசையமைத்துப் பிரபலப்படுத்தினர். அதில் வரும் சில வரிகளுக்காக (I am a Blond Bimbo, Undress me anywhere என்ற வரிகளுக்காக) Mattel நிறுவனம் அந்த குழுவின் மேல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்தது. ஆனால் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. அது அமெரிக்காவின் முதல் சட்டத்திருத்தம் (கருத்துச் சுதந்திரத்தின்) கீழ் வரும் என்று தீர்ப்பளித்தது.

Barbie Playhouse என்ற இணையதளம் அந்தரங்கமாகப் பேச பார்ப்பி என்ற பெண் பெயர் கொண்டவரை நியமித்தது. Mattel நிறுவனம் நீதிமன்றம் சென்றபோது, நீதிமன்றம் பார்ப்பி நிறுவனத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. அந்த இணையத்தளத்தில் பயன்படுத்தப்படும் நிறங்கள் பார்ப்பி பொம்மையின் நிறுவனத்தை ஒத்திருக்கின்றது என்றது.

Bratz நிறுவனம் தயாரித்த பொம்மைகள் பார்ப்பி பொம்மைகளின் விற்பனையைச் சரியச் செய்தது. இதனால் Mattel நிறுவனம் நீதிமன்றத்தை நாடியபோது, Mattel நிறுவனத்தில் வேலை செய்த நபர் பின் Bratz நிறுவனத்திடம் இந்த எண்ணங்களைக் கொண்டு வடிவமைத்துள்ளார் என்று கண்டறியப்பட்டு Bratz நிறுவனம் பொம்மைகள் தடை செய்யப்பட்டது.

Nissan கார் நிறுவனம் Joe like doll வண்டி ஓட்டிவந்து மூழ்கும் பார்ப்பி பொம்மையை காப்பாற்றுவது போல ஒரு விளம்பரம் எடுத்து ஒளிபரப்பியது. இதனை எதிர்த்து Mattel நிறுவனம் நீதிமன்றம் சென்று வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியில் முடித்துக்கொண்டது.

ஆதாரம் : The judge who hated red nail polish : & other crazy but true stories of law & lawyers (ஆங்கில நூல்)


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பார்ப்பி பொம்மையும் வழக்குகளும் !!”

அதிகம் படித்தது