பிரதமர் மோடி: ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் தற்போது உதவ இயலாது
Jan 19, 2017
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நேற்று(18.01.17) தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார்.
இன்று(19.01.17) பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், வறட்சிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆனால் பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது, தமிழர்களின் உணர்வுகளுடன் ஒன்றிப்போனது என்பதை உணர்வதாகவும், ஆனால் ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் தற்போது தம்மால் உதவ இயலாது என்று கூறியுள்ளார்.
மேலும் வறட்சியை சமாளிக்க மத்திய அரசு குழு தமிழகம் வரும் எனவும், மாநில அரசுக்குத் தேவையான உதவிகளை செய்யும் எனவும் கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரதமர் மோடி: ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் தற்போது உதவ இயலாது”