பிற மாநிலங்களுக்கு வழி காட்டிய தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கான அறவழிப் போராட்டம்
Jan 27, 2017
தமிழகத்தில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப்போராட்டத்தால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு, தமிழக சட்டசபையில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு தமிழகத்தில் நடைபெற்ற அறவழிப்போராட்டத்தை பின்பற்றி பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
‘ரேக்ளா ரேஸ்’ போன்ற ‘பெயில்காடி ஷரியத்’ போட்டியை மீண்டும் நடத்தக் கோரி மகாராஷ்டிரா மாநிலத்தில் போராட்டம் துவங்கியுள்ளது. அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் “கம்பாலா’ என்னும் எருது போட்டி ‘பீட்டா’ அமைப்பு தொடுத்த வழக்கால் நின்று போனது. இப்போட்டியை மீண்டும் நடத்தக்கோரி கர்நாடக மக்கள் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.
சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆந்திராவில் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். இவ்வாறு பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள இந்த போராட்ட உணர்வுக்கு தமிழ்நாட்டில் அமைதியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு அறவழிப் போராட்டம் வழிகாட்டியாக இருக்கிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிற மாநிலங்களுக்கு வழி காட்டிய தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கான அறவழிப் போராட்டம்”