மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புதுச்சேரியை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிJan 12, 2017

போதிய மழை இல்லாததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள், வறட்சியால் பயிர்கள் வாடியதால் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் தற்கொலை செய்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தார்.

siragu-naarayanasaami

இதையடுத்து புதுச்சேரியிலும் போதிய மழை இல்லாததால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் புதுச்சேரியையும் வறட்சி பாதித்த மாநிலமாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் 8900ஹெக்டேர், காரைக்காலில் 4400ஹெக்டேர் பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு இழப்பிடும், நிலவரி தள்ளுபடியும் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதுச்சேரியை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி”

அதிகம் படித்தது