மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புதுச்சேரி- நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் நாராயணசாமி வெற்றிNov 22, 2016

புதுச்சேரி- நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 19ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நாராயணசாமி 11,143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பெற்ற வாக்குகள் 18,709. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால் நாராயணசாமி தனது முதலமைச்சர் பதவியை தக்கவைத்துள்ளார்.

siragu-naarayanasaami

இத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நாராயணசாமி முதன்முறையாக எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுவரை இவர் மூன்று முறை ராஜ்யசபா எம்.பி. யாக இருந்திருக்கிறார்.

வெற்றி பெற்றது குறித்து நாராயணசாமி, புதுச்சேரியை ரவுடிகளிடமிருந்து மீட்டுள்ளதால் மக்கள் கொடுத்த பரிசுதான் இது என்று கூறினார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதுச்சேரி- நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் நாராயணசாமி வெற்றி”

அதிகம் படித்தது