பேருந்துகளில் மறைமுகக் கட்டண உயர்வு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Mar 15, 2017
சென்னையில் மொத்தம் 3689 அரசு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 1230 பேருந்துகள் சாதாரண கட்டணத்தில் இயங்கும் பேருந்துகள். சாதாரண கட்டணத்தில் இயங்கும் பேருந்துகளை விரைவு கட்டணப் பேருந்துகளாக மாற்றி மறைமுகக் கட்டண உயர்வு கொண்டுவந்துள்ளது என்று அதிமுக அரசு மீது ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
1230 சாதாரண கட்டணத்தில் இயங்கும் பேருந்துகளில் 766 பேருந்துகளை விரைவு கட்டண பேருந்துகளாக மாற்றியிருக்கிறார்கள். இதனால் சாதாரண கட்டணம் 3 ரூபாயிலிருந்து 14 ரூபாய் எனவும், விரைவுக் கட்டணம் 5ரூபாயிலிருந்து 21 ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே விரைவுப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ள 766பேருந்துகளை சாதாரண கட்டணத்தில் இயங்கும் பேருந்துகளாக மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும், இதனை கைவிடவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்டாலின்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பேருந்துகளில் மறைமுகக் கட்டண உயர்வு: ஸ்டாலின் குற்றச்சாட்டு”