மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது: கடலூர், புதுச்சேரியில் பதற்றம்May 24, 2017

புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகில் சோரியாங்குப்பம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 10 மதுபானக்கடைகள் மற்றும் 2 சாராயக் கடைகள் உள்ளது. கடலூரிலிருந்து இக்கிராமத்திற்கு வருவதற்கு பெண்ணை என்ற பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

Siragu tasmac

கடலூரிலிருந்து குடிமகன்கள் பலர் சோரியாங்குப்பத்திற்கு சென்று மது குடிப்பது வழக்கம். அங்கு அதிக மதுக்கடைகள் இருப்பதால் பொதுமக்கள் பல சிரமங்களுக்கு ஆளானார்கள். மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுருத்தி வந்தனர்.

எனினும் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை, மேலும் 15 மதுக்கடைகளுக்கு அனுமதி அளித்தது அரசு. இதனால் ஆத்திரம் அடைந்த அக்கிராம மக்கள் இன்று(24.05.17) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெண்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் அங்குள்ள மதுக்கடைகளை சூறையாடினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது: கடலூர், புதுச்சேரியில் பதற்றம்”

அதிகம் படித்தது