மதுக்கடை ஊழியர்கள் ரேஷன்கடைக்கு மாற்றம்
May 24, 2017
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை மூடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள 3500 மதுக்கடைகள் மூடப்பட்டது.
மதுக்கடைகள் மூலமாக அதிகமாக வருமானம் ஈட்டிய தமிழக அரசு, நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை கிராமத்தில் திறப்பதற்கு ஏற்பாடு செய்தது. ஆனால் கிராமத்தில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்காக பெண்கள் உட்பட பொதுமக்கள் போராட்டம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் மாவட்ட மேலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மதுக்கடையில் அதிகம் பேர் பணியாற்றுகிறார்கள். அதில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்படாதவர்கள், இளங்கலை பட்டம் பெற்றவர்கள், பல ஆண்டுகள் பணியாற்றுபவர்கள் என பலர் அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் கூட்டுறவு சங்கம் மற்றும் அவை நடத்தும் ரேஷன் கடைகளில் இவர்களை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி துவங்கும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மதுக்கடை ஊழியர்கள் ரேஷன்கடைக்கு மாற்றம்”