மத்திய அரசு ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றதற்கு எதிராக திமுக மனித சங்கிலி போராட்டம்
Nov 24, 2016
மத்திய அரசு ரூபாய் 500, 1000 நோட்டுக்களை திரும்பப் பெற்றது. இரு வாரங்கள் முடிந்தும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு மக்கள் படும் வேதனைக்கு மத்திய அரசு மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் வகையில் திமுக மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த மனித சங்கிலி போராட்டத்தை மு.க.ஸ்டாலின் சென்னை புரசைவாக்கத்தில் துவங்கி வைத்தார். இன்று 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டம் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தொழிலாளர்கள், திமுக-வினர், வணிகர்கள் உள்பட பலரும் இதில் கலந்து கொண்டனர். மேலும் இப்போராட்டத்தில் தயாநிதி மாறன், எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலி அயனாவரம் சாலை வரை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டிருந்தது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றதற்கு எதிராக திமுக மனித சங்கிலி போராட்டம்”