மாநில தேர்தல் ஆணையம்: டிசம்பர் 31-க்குள் உள்ளாட்சி தேர்தல் இல்லை
Nov 28, 2016
தமிழகத்தில் 1,31,794 உள்ளாட்சி பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 17,19ம் தேதிகளில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் இத்தேர்தலில் முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் இத்தேர்தலை ரத்து செய்தும், 10 பரிந்துரைகளை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவாக பிறப்பித்தும் டிசம்பர் 31க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ரத்து அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கும்படி தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தபின், ரத்து அறிவிப்பு நீடிக்கும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நிலுவையில் உள்ள இவ்வழக்கு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணை நடந்து மீண்டும் நவம்பர் 28க்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் டிசம்பர் 31க்குள் உள்ளாட்சி தேர்தல் நடக்க சாத்தியம் இல்லை என்று மனு தாக்கல் செய்தது மாநில தேர்தல் ஆணையம்.
குற்றப் பின்னணியில் உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என அரசியல் காட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்து இவ்வழக்கை ஜனவரி 3ம் தேதி ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாநில தேர்தல் ஆணையம்: டிசம்பர் 31-க்குள் உள்ளாட்சி தேர்தல் இல்லை”