மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மிளகின் மருத்துவ குணங்கள்

சிறகு நிருபர்

Dec 3, 2022

நம் உலகை அச்சுறுத்தும் பல வைரஸ் மிக எளிதாகப் பரவக் கூடியதாக உள்ளது. இக்காலத்தில் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தக்கூடிய மிளகின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.

siragu milagu1

௧. சித்த மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்படும் மிளகு சளி, இருமல் நீக்குவதற்கு பயன்படுகிறது.

௨. வயிற்றிலுள்ள வாயுவை நீக்கி உடலுக்கு வெப்பத்தைத் தருகிறது.

௩. நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டுகிறது.

௪. உணவின் நச்சுத்தன்மையை போக்கும் மிளகு ஆண்களின் மலட்டுத்தன்மையைப் போக்குகிறது.

௫. பற்களில் ஏற்படும் சொத்தை மற்றும் ஈறுகளின் வீக்கத்தை ஏற்படுத்தும் கிருமிகளின் உற்பத்தியை தடுக்கிறது மிளகு.

௬. சில மிளகுகளை சாப்பிட்டு வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

௭. இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள மிளகு முக்கியப் பங்கு வகிக்கிறது.

௮. மணமும் காரமும் கொண்ட மிளகு நாம் உண்ணும் உணவை செரிக்க வைக்கிறது.

௯. உடலில் கொழுப்பு சேர விடாமல் உடல் எடையைக் குறைக்கிறது.

௧௦. மூக்கடைப்பைப் போக்கி சுவாசப் பிரச்சினையைப் போக்குகிறது.

௧௧. ஆஸ்துமா நோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

௧௨. நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது இந்த மிளகு.

௧௩. மிளகை நெய்யுடன் சேர்த்து உணவுடன் எடுத்து வந்தால் கண்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

 

 

 


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மிளகின் மருத்துவ குணங்கள்”

அதிகம் படித்தது