முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு
Sep 25, 2016
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்ற ஒரு வருடகாலமாகவே இவரது உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியாகி வந்தது. நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று(22.09.16) இரவு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறை எண் 2008 ல் உள்ள முதல்வரைப் பார்க்க உறவினரைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. அதனால் முதல்வரைக் காண வந்த அமைச்சர்கள் மருத்துவமனையின் கீழ்த்தளம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு”