மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதுகுவலியைப் போக்க வழிமுறைகள்

சிறகு சிறப்பு நிருபர்

Feb 20, 2016

mudhukuvali3

  1. முதுகெலும்பு வலிகளுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து, எனவே பூண்டு எண்ணெயை முதுகெலும்பில் தேய்த்துவர வலி குறையும்.
  2. முதுகுவலி இருப்பவர்கள் 1 கிராம் சுக்கு, 5 மிளகு மற்றும் 5 கிராம்பு சேர்த்து நீர் விட்டு தேநீர் செய்து, தினமும் 2 வேளை குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.
  3. தளுதாளி இலையுடன் பூண்டு, நல்லெண்ணெய் சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.
  4. சுடுநீரில் இடுப்புவரை அமிழ்ந்து உட்காருவது வலியைக் குறைக்கும்.
  5. ஆடாதொடா வேரை கசாயம் செய்து குடித்து வந்தால் முதுகுவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
  6. முருங்கை வேரிலிருந்து சாறு எடுத்து, அதில் சம அளவு பால் சேர்த்து சாப்பிட்டால் முதுகுவலி மற்றும் உள் உறுப்புகளில் உள்ள வீக்கம் குணமாகும்.
  7. ஏதேனும் ஒரு எண்ணெயில் பூண்டை வதக்கி, அந்த எண்ணெயை முதுகில் தேய்த்தால் முதுகுவலி குறையும்.
  8. உப்பை வறுத்து ஒரு துணியில் கட்டி மிதமான சூட்டில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலி குறையும்.
  9. புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க வைத்து, களிம்பு போல் தயாரிக்கவும். இந்தக் களிம்பை முதுகில் தடவினால் முதுகுவலி குணமாகும்.
  10. வெற்றிலையை நன்கு கசக்கி சாறெடுத்து, சிறிது தேங்காய் எண்ணெயுடன் கலந்து வலி உள்ள முதுகு பகுதிகளில் தடவி வர முதுகுவலி தீரும்.
  11. 50 மில்லி நல்லெண்ணையில் 5 பூண்டு பற்களை சேர்த்து நன்கு காய்ச்சி இளம் சூட்டில், வலியுள்ள இடங்களில் தடவினால் முதுகுவலி குறையும்.

சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதுகுவலியைப் போக்க வழிமுறைகள்”

அதிகம் படித்தது