ரயில்வே போலீஸ் உத்தரவு: ரயில் நிலையங்களில் செல்பி எடுக்கக்கூடாது
Nov 21, 2016
ரயில் நிலையங்கள், ஓடும் ரயில், ரயில் தண்டவாளங்களில் செல்பி எடுப்பவர்களின் கவனக்குறைவால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது.
தற்போது பார்த்தசாரதி என்ற வாலிபர் ஓடும் ரயிலில் செல்பி எடுத்த பொழுது மயங்கி கீழே விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சென்ற புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் செங்கல்பட்டு-கடற்கரை ரயிலில் செல்பி எடுக்கும்பொழுது தவறி விழுந்து அந்த இடத்திலேயே பலியானார் பூந்தமல்லியைச் சேர்ந்த தினேஷ்குமார்.
எனவே இம்மாதிரியான விபத்துகளை தடுக்க தமிழக அரசின் ரயில்வே போலீஸ், ரயில் நிலையங்கள், ஓடும் ரயில், ரயில் தண்டவாளங்களில் செல்பி எடுப்பவர்களின் கவனக்குறைவால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டு வருவதால் இனி இவ்விடங்களில் செல்வி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரயில்வே போலீஸ் உத்தரவு: ரயில் நிலையங்களில் செல்பி எடுக்கக்கூடாது”