ரிசர்வ் வங்கி: பத்து ரூபாய் நாணயங்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் செல்லுபடியாகும்
Jan 27, 2017
கடந்த 2016 நவம்பர் 8 ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது மத்திய அரசு. அந்த அறிவிப்பிற்குப் பிறகு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த 2010 மற்றும் 2015 ம் ஆண்டு அச்சிடப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டது.
இந்த நாணயங்கள் பல்வேறு வடிவங்களில் இருப்பதால் போலி நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாகவும், இந்த நாணயங்கள் செல்லாது என்றும் தவறான தகவல்கள் வெளியாகிவந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும், வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவித்தது.
இதையடுத்தும் சிறு வியாபாரிகள், பெட்டிகடைகள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர். பணத்தட்டுப்பாட்டைப் போக்க இந்த நாணயங்களை வெளியிட்டுள்ளதால் மக்கள் இந்த நாணயங்களை செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே ரிசர்வ் வங்கி பத்து ரூபாய் நாணயங்கள் எந்த வடிவில் இருந்தாலும் செல்லும் என்று மீண்டும் அறிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரிசர்வ் வங்கி: பத்து ரூபாய் நாணயங்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் செல்லுபடியாகும்”