மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரூபாய் நோட்டு பிரச்சினை: நாளை மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டம்



Nov 24, 2016

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றது. புதிய ரூபாய் நோட்டுக்கள் இன்னும் பரவலாகக் கிடைக்காததால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

siragu-bank-struggle

புதிய ரூபாய் நோட்டுக்கள் விரைவில் மக்களுக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதுவரை விரைவான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. மத்திய அரசின் இந்தப் போக்கை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வங்கி சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி. கிருஷ்ணன் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரூபாய் நோட்டு பிரச்சினை: நாளை மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டம்”

அதிகம் படித்தது