மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரூபாய் நோட்டு விவகாரம்: பணப்பற்றாக்குறையைப் போக்க முதல்வர்கள் குழு அமைக்க மத்திய அரசு முடிவுNov 29, 2016

கடந்த நவம்பர் 8ம் தேதி 500,1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்குப் பிறகு பணப் பற்றாக்குறை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இதில் கட்டுப்பாடுகள் பல விதித்தது. வங்கிகளிலும், ஏ.டி.எம். களிலும் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

siragu-arun-jaitley

இந்த அறிவிப்பு வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் நிலைமை இன்னும் சீராகவில்லை. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவும், பழைய நிலைக்குக் கொண்டு வரவும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க 5 முதல்வர்கள் கொண்ட குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் எனவும், முதல்வர்கள் குழு பற்றி கூறியதாகவும், இக்குழுவுக்கு அவரை தலைமை தாங்குமாறு கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரூபாய் நோட்டு விவகாரம்: பணப்பற்றாக்குறையைப் போக்க முதல்வர்கள் குழு அமைக்க மத்திய அரசு முடிவு”

அதிகம் படித்தது