மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஸ்டாலின் கைதுNov 28, 2016

நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற்றது மத்திய அரசு. இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று (நவம்பர் 28) எதிர்கட்சிகள் சார்பில் நாடு தழுவிய பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

siragu-mk-stalin

இதையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர். ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் பலரும் மத்திய அரசுக்கு எதிராக வசனங்களுடன் முழக்கமிட்டனர். இந்நிலையில் அனுமதியின்றி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக ஸ்டாலின் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஸ்டாலின் கைது”

அதிகம் படித்தது