மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

லோக்சபாவில் வருமான வரி சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதுNov 29, 2016

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததிலிருந்து நாடு முழுவதும் பணம் மாற்றப்படுவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு. பொதுமக்கள் எவ்வளவு பணத்தை மாற்றினால் எவ்வளவு வரி விதிப்பது என்று பிரச்சனை எழுந்தது. இதில் புதிய விதியை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

siragu-lok-sabha

நேற்று நடைபெற்ற லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வருமான வரி சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இது பற்றியான விவாதம் இன்றைய லோக்சபாவில் நடைபெற்றது. இம்மசோதா மக்களுக்கு எதிரானது என்று குற்றம்சாட்டினர் எதிர்கட்சிகள்.

இதற்கு அருண் ஜெட்லி விளக்கமளித்த பிறகும் எதிர்கட்சிகளின் கூச்சல் அதிகமானது. இதனிடையிலும் இந்த வருமானவரி சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

வருமானத்தை கணக்கில் காட்டாமல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு 30 சதவிகித வரியும், 33 சதவிகித கூடுதல் வரியும், 10 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்படும். கணக்கில் காட்டாத வருமானத்தை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்தால் 75சதவிகிதம் வரியும், 10 சதவிகித அபராதமும் விதிக்கப்பட்டும் என்று புதிய வருமானவரி சட்ட திருத்த மசோதாவில் உள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “லோக்சபாவில் வருமான வரி சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது”

அதிகம் படித்தது