வங்கிகளில் 4500 ரூபாய் மாற்றினால் விரலில் மை
Nov 15, 2016
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து அந்த பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்களின் வருகை வங்கிகளில் அதிகரித்துள்ளது. மேலும் நோட்டுகளை மாற்றுவதற்கு, வந்த நபரே மீண்டும் மீண்டும் வருவது தெரியவந்துள்ளது.
மேலும் பணம் மாற்றுவதில் ஏற்படும் நெரிசலைத் தடுக்க 4500 ரூபாயை வங்கிகளில் மாற்றுபவர்களின் விரல்களில், தேர்தலின் போது இடப்படும் மை போல் பணம் வழங்கும் இடத்தில் வைக்கப்படும் என பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் பெருநகரங்களில் இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “வங்கிகளில் 4500 ரூபாய் மாற்றினால் விரலில் மை”