மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வங்கிகளுக்கு இரண்டு நாட்கள்(இன்றும், நாளையும்) விடுமுறைNov 26, 2016

மாதத்தில் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை வேலைநாளாகவும், மாதத்தின் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை விடுமுறை எனவும் வங்கிகளுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது.

siragu-bank

இதையொட்டி இன்று நான்காவது சனிக்கிழமை என்பதாலும், நாளை ஞாயிறு விடுமுறை என்பதாலும் இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே மக்கள் வங்கிகளுக்கு செல்ல முடியாமல் ஏ.டி.எம்-களுக்கு படையெடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் ஏ.டி.எம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பழைய 500, 1000ரூபாய்நோட்டுக்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதன் காரணமாக இப்பணத்தை மாற்றுவதன் பொருட்டு வங்கிகள் ஓரிரு வாரங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் செயல்பட்டன. இந்நிலையில் நோட்டுக்களை மாற்றுவதற்கான தேதி முடிவடைந்ததால் வங்கிகள் கூடுதல் நாள் பணியாற்றுவதை தவிர்த்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வங்கிகளுக்கு இரண்டு நாட்கள்(இன்றும், நாளையும்) விடுமுறை”

அதிகம் படித்தது