மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வணிகர் சங்கப் பேரவை: தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் மார்ச் 1 முதல் விற்பனை இல்லைJan 24, 2017

தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கோரி அமெரிக்க அமைப்பான பீட்டா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

Siragu pepsi coca-cola

அதனால் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களிடையே அமெரிக்க அமைப்பான பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு குளிர்பானங்களை குடிக்கமாட்டோம் என்று கோஷமிட்டனர்.

போராட்டக்காரர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை மார்ச் 1 முதல் விற்பனை செய்யமாட்டோம் என்று முடிவு எடுத்துள்ளது. மேலும் உள்நாட்டு குளிர்பானங்களை ஊக்குவிக்கப்போவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விழுப்புரத்தின் இன்று(24.01.17) நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வணிகர் சங்கப் பேரவை: தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் மார்ச் 1 முதல் விற்பனை இல்லை”

அதிகம் படித்தது