மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வயிற்றுப்போக்கு குணமாக குறிப்புகள்

சிறகு சிறப்பு நிருபர்

Jan 2, 2016

vayitruvali2

 1. தேனுடன் இஞ்சியை வதக்கி, நீர் விட்டுகொதிக்க வைத்து, அந்தநீரை காலை, மாலை என்று இருவேளை குடித்துவர வயிற்றுப்போக்கு தீரும்.
 2. கறிவேப்பிலையுடன் ஒரு தேக்கரண்டியளவுசீரகத்தையும் சேர்த்து அம்மியில் வைத்துமை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
 3. சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்தம் செய்து, அதனுடன் உடன்சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.
 4. 100 மில்லி பாலுடன் இரண்டுமாதுளம் பிஞ்சை அரைத்து, பாலுடன் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
 5. இளம் பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு சரியாகும்.
 6. வெற்றிலையுடன்  சிறிது ஓமத்தைச் சேர்த்து அரைத்து அதனுடன் ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு உடனே குணமாகும்.
 7. மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குடிக்க அனைத்து வகையான வயிற்றுப் பிரச்சனைகளும் தீரும்.
 8. சிறிதளவு கசகசாவை வாயில் போட்டு நன்றாக மென்று சிறிது தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.
 9. பாலுடன் மாங்கொட்டையின் பருப்பை பொடி செய்து கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
 10. சீரகத்தை எலுமிச்சை பழசாற்றில் ஊற வைத்து காயவைத்து, மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
 11. மா மரத்தின் துளிர் இலைகளைப் பொடியாக்கி, தேனில் குழைத்து சாப்பிட, வயிற்றுப்போக்கு நிற்கும்.
 12. பப்பாளிப்பழம் சாப்பிட்டால் தொடர் வயிற்றுப்போக்கு குறையும்.


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வயிற்றுப்போக்கு குணமாக குறிப்புகள்”

அதிகம் படித்தது