மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வாகனங்களை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம்Apr 1, 2017

மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன் வரிசையில் இன்று (ஏப்ரல் 1) முதல் புதிய வாகனங்களை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

siragu-aadhar

புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற சுற்றறிக்கையை போக்குவரத்துத்துறை கமிஷனர் தயானந்த கட்டாரியா சுற்றறிக்கையை தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளார்.

அதன்படி புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கான வாகனங்களுக்கான பதிவு சான்றிதழில் ஆதார் எண், பான் எண், மொபைல் எண் போன்றவை கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று போக்குவரத்துத்துறை கமிஷனர் தயானந்த கட்டாரியா அறிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாகனங்களை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம்”

அதிகம் படித்தது