மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விசித்திர வழக்குகள் – பகுதி 4

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Mar 12, 2022

siragu visiththira vazhakku1

மற்றவர் மீது வழக்குத் தொடுப்பது வழக்கம். ஆனால் 1995இல் ராபர்ட் எல். பிராக் (Robert L. Brock) தன் மீதே வழக்குத் தொடுத்துக் கொண்டார். இந்த விசித்திர வழக்கை அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா நீதிமன்றம் சந்தித்தது. ஏற்கனவே அத்துமீறி இடத்திற்குள் நுழைந்த வழக்கொன்றில் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று வந்தவர் ராபர்ட். வெர்ஜினியா சிறையில் வசதி குறைபாடுகள் காரணமாக அங்கிருந்து தப்பிக்க தன் மீதே வழக்குத் தொடுத்துக் கொண்டார்.

இந்த வழக்கில் ஏழு பக்க மனுவில், ஜூலை 1, 1993 தான் மது அருந்திய காரணத்தால் மத நம்பிக்கைக்கு எதிராகவும் சமூக உரிமைகளுக்கு எதிராகவும் தான் நடந்து கொண்டதாகத் தெரிவித்தார். தனக்கு $5 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வேண்டுமென்றும் அதனை அரசு தனக்காக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கான காரணத்தில், அவர் அரசின் அங்கம், தற்போதைக்கு அந்த பொருள் ஆட்ட முடியா சூழலில் சிறையில் இருப்பதால் அரசு இந்தத் தொகையை தனக்கு வழங்க வேண்டுமென்றும் அவர் விடுதலையானவுடன் அதனைத் திருப்பி தந்துவிடுவதாகவும் உத்தரவாதம் அளித்திருந்தார்.

இந்த வழக்கைக் கையாண்ட நீதியரசர் இந்த வழக்கு அற்பமானது எனத் தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கோடு ராபர்ட் தன்னை நிறுத்திக் கொள்ளவில்லை. பல்வேறு வெர்ஜினியா மாநில நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடுத்துக் கொண்டிருந்தார். 1997இல் United States Of Appeal , Fourth circuit இவரின் வழக்கு ஒன்றில் இவ்வாறு கூறியது:

“ராபர்ட் 1995-96 மட்டும் 29 மேல் முறையீடுகள் செய்திருக்கிறார். சிறையில் வசதியும் சூழ்நிலையும் சரியில்லை என இவர் கூறும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. இவரின் தொடர் வழக்குகளால் நீதி மன்றத்திற்குச் சுமை. இவர் மீது சட்டத்தை மதிக்காத குற்றத்திற்கும் நீதிமன்ற நேரத்தை வீண் அடித்த குற்றத்திற்காகவும் ஏன் தண்டனை வழங்கக் கூடாது என நீதிமன்றம் வினா எழுப்பியது. அதற்கு உத்தரவும் போட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண் தனக்கு வேலை கிடைக்காததால் தன் கல்லூரியின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். ராபர்ட் வழக்கை விட அந்த வழக்கு மேலானது என விவாதிக்கப்பட்டன.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விசித்திர வழக்குகள் – பகுதி 4”

அதிகம் படித்தது