மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விசித்திர வழக்குகள் பகுதி 7

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

May 7, 2022

siragu vischithra valzhakku1
Benjamin Careathers v Red Bull (2013)

2013 இல் பெஞ்சமின் என்பவர் ரெட் புல் என்ற நிறுவனத்தை எதிர்த்து வழக்குப் போடுகின்றார். வழக்கின் சாரம் ரெட் புல் நிறுவனம் தன்னுடைய பானங்களை விற்பதற்காக பொது மக்களை தன் விளம்பர வாசகங்களால் ஏமாற்றுகிறது என்பதாகும்.

இன்றைக்கும் பல பொருட்களை நாம் வாங்குகிறோம். அவர்களின் விளம்பர வாசகங்கள் பல நேரங்களில் மக்களை ஏமாற்றுவதாகவே அமைகிறது. இதைத் தின்றால் சக்தி பிறக்கும், உயரமாய் வளரலாம், இந்த பற்பசையைப் பயன்படுத்தினால் பற்கள் உடனே வெண்மையாகிடும் எனப் பல விளம்பர வாசகங்களைக் கேட்டிருப்போம். ஆனால் அதை ஒருநாளும் உண்மையா என எண்ணிப் பார்ப்போர் வெகு சிலர். அத்தகைய வாசகங்களை எதிர்த்து நீதிமன்றம் செல்வோரும் குறைவு. ஆனால் பெஞ்சமின் ரெட் புல்லின் இதுபோன்ற விளம்பர வாசகம் ஒன்றை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். 2002 முதல் அவர் அந்த குளிர்பானத்தைப் பருகி வருகின்றார். அதைப் பருகினால் சிறகுகள் முளைக்கும் என்று விளம்பரம் சொல்கிறது ஆனால் அது பொய், ஒரு கோப்பை காபியில் உள்ள caffeine தான் இதிலும் உள்ளது எனத் தொடர்ந்து ஆராய்ந்து சொன்னபோதும் ரெட் புல் நிறுவனம் இந்த வாசகங்களை நீக்க மறுக்கிறது என வழக்குத் தொடுத்தார்.

ரெட் புல் நிறுவனம் தாங்கள் மக்களை ஏமாற்றவில்லை என வாதாடிக் கொண்டே அவர்கள் இணையத்திலிருந்த இந்த வாசகங்களை நீக்குகின்றனர். இறுதியில் வழக்கு பெஞ்சமினுக்கு சாதகமாகத் தீர்ப்பாகின்றது. இது பொது அறிவு சார்ந்தது என்றாலும் மக்களைப் பொய்யான வாசகங்களை நம்பி வாங்கத் தூண்டுவது தவறு என்பதே நீதிமன்றம் கருதியது. அதனால் 13$ பில்லியன் இழப்பீடு கடந்த பத்தாண்டுகளாக ரெட் புல் பானம் வாங்கியவர்கள் அனைவருக்கும் பிரித்துத் தர வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது.

அதே நேரத்தில் இந்த பானத்தைக் குடித்தால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படப்போகும் பக்க விளைவுகள் பற்றியும் எச்சரிக்கை தர வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

இன்றைக்கும் இதன் நிறுவனர் உலக பணக்காரர்கள் வரிசையில் 40வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விசித்திர வழக்குகள் பகுதி 7”

அதிகம் படித்தது