மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விசித்திர வழக்குகள் பகுதி 9

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jun 11, 2022

siragu vischithra valzhakku1

Splenda v. Equal (2007)

ஸ்பெலெண்டாவும் ஈக்வல்லும் சர்க்கரைக்குப் பதிலாகக் குறைந்த கலோரிகள் உள்ள சக்கரை மாற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள். இந்தத் துறையில் இரண்டுமே பெரிய அளவில் பங்குகள் வைத்திருந்தன. குறிப்பாக ஸ்பெலெண்டா 62% பங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

2007ஆம் ஆண்டு பிலடெல்பியாவில் வழக்கு ஈக்வல் நிறுவனத்தால் தொடரப்பட்டது. அதில் ஸ்பெலெண்டா தவறான பரப்புரை தங்கள் பொருள் விற்பனைக்காகச் செய்கின்றனர் என்றும், அதனால் நுகர்வோர் மற்ற நிறுவனத்தைவிட ஸ்பெலெண்டாவின் பொருட்களை வாங்க உந்தப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. மெரிசான்ட் ஈக்வலின் நிறுவன குழுமத்தைச் சார்ந்த நிறுவனம். அது ஸ்பெலெண்டாவின் மார்கெட்டிங் நிறுவனமான மெக்நேயில் நியூட்ரிஷனல்ஸ்சை எதிர்த்து வழக்குப் பதிவு செய்தது. இதில் ஸ்பெலெண்டாவின் பரப்புரை வாசகம், “made from sugar, so it tastes like sugar.” என்பது நுகர்வோரை ஏமாற்றி திசை திருப்புகிறது என்றது.

இதில் ஸ்பெலெண்டாவின் சக்கரை மாற்றில் சுக்ரோஸ் என்பது பல சுழற்சி முறைகளில் மாற்றப்பட்டு சுக்ரலோஸ் என்ற பொருள் கிடைப்பதாகவும் அது ஈக்வலின் அஸ்பர்டாமே என்ற வேதியல் பொருளோடு ஒப்பிட்டு அது சுக்ரோசிலிருந்து தயாரிக்கப்படவில்லை எனினும் 200% ஸ்பெலெண்டாவின் சக்கரை மாற்றோடு இனிப்பானது என வாதிட்டது.

ஒரு மாத காலம் நடத்தப்பட்ட வழக்கில் ,made from sugar, so it tastes like sugar.” என்ற பரப்புரை வாசகம் நுகர்வோரை ஏமாற்றுகிறது என நிரூபனமானது. இறுதியில் இரண்டு நிறுவனங்களும் சமரசத்திற்கு வந்தபோதும் என்ன இழப்பீடு வழங்கப்பட்டது என்பது பொதுவில் அறிவிக்கப்படவில்லை.

இதே வழக்கு பிரான்சிலும் ஸ்பெலெண்டாவிற்கு எதிராகத் தொடரப்பட்டது. பிரான்சின் நீதிமன்றம் ஸ்பெலெண்டாவின் வாசகங்கள் பொதுமக்களை ஏமாற்றுகிறது எனக் கூறி மெரிசான்ட் நிறுவனத்திற்கு 40,000யூரோக்கள் இழப்பீடாக வழங்கப்பட்டது.

இந்த இரு நிறுவனங்களுக்குமான வழக்கு தொடர்கதையாகவே இருந்திருக்கிறது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விசித்திர வழக்குகள் பகுதி 9”

அதிகம் படித்தது