விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர்
Oct 17, 2016
தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தை இன்று நடத்துகின்றனர். இப்போராட்டத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சை, கடலூர், ஆரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆடுதுறை, சிவகங்கை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க மற்றும் ம.தி.மு.க கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட மக்கள் நல கூட்டணி தொண்டர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர்”