மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: புதுக்கோட்டை முழுவதும் இன்று கடையடைப்புMar 1, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கியது மத்திய அரசு. இத்திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-neduvasal2

நெடுவாசலை சுற்றியுள்ள நூறு கிராமத்து மக்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் என பலரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று ஒரு நாள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று காலை முதல் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. இதில் சுமார் இரண்டாயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: புதுக்கோட்டை முழுவதும் இன்று கடையடைப்பு”

அதிகம் படித்தது