மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 19-வது நாளாக போராட்டம்Mar 6, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெடுவாசலில் 19- வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

Siragu neduvasal

இப்போராட்டம் மனித சங்கிலி, கும்மியடித்து போராட்டம், ஒப்பாரி வைத்துப் போராட்டம் போன்ற பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் தமிழ்நாடு முழுவதிலும் நடைபெறும் இப்போராட்டத்தில் மாணவர்கள், பொதுமக்கள், பெண்கள் என பலரும் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் போராட்டத்தின் 19-வது நாளான இன்று நெடுவாசல் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் போராட்டம் நடத்தினர். ஹைட்ரோகார்பன் உருவ பொம்மையை எரித்து அங்கு போராட்டம் நடைபெற்றுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 19-வது நாளாக போராட்டம்”

அதிகம் படித்தது