மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அதிமுக எம்.எல்.ஏ., நட்ராஜ்: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பேன்



Feb 17, 2017

தங்களிடம் 124 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து, தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்தி வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதையடுத்து நேற்று எடப்பாடி பழனிச்சாமியை பதவியேற்க அழைத்ததோடு, 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் ஆளுநர்.

Siragu mla natraj

பின் நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். இந்நிலையில் நாளை(18.02.17) சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இச்சூழலில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ், நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என்று தெரிவித்துள்ளார். கட்சி தாவல் தடைச் சட்டத்தால் என்னுடைய பதவி போனாலும் கவலையில்லை என்று தெரிவித்துள்ளார் அதிமுக எம்.எல்.ஏ., நட்ராஜ். இதனால் எடப்பாடி பழனிச்சாமி எம்.எல்.ஏ., ஆதரவாளர்களின் எண்ணிக்கை 123 ஆக உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அதிமுக எம்.எல்.ஏ., நட்ராஜ்: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பேன்”

அதிகம் படித்தது